தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி ரகசிய தகவல் தந்தால் ரூ.170 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி ரகசிய தகவல் தந்தால் ரூ.170 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி ரகசிய தகவல் தந்தால் ரூ.170 கோடி பரிசு; அமெரிக்கா அறிவிப்பு


ADDED : நவ 07, 2026 05:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 05:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி திட்டம் பற்றிய ரகசிய தகவல்களை பகிர்வோருக்கு ரூ.170 கோடி பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.

அமெரிக்க பருவத்தேர்தல் முடிந்துவிட்ட பின்னரும், ஈரான் அமெரிக்கா போர் முடிவுக்கு வரவில்லை. தேர்தலில் டிரம்ப் பின்னடைவை சந்தித்தாலும், போரை முடிவுக்கு கொண்டு வர ஆர்வமாக இருப்பதாக அறிவித்திருந்தார். பேச்சு வார்த்தை நடக்கிறது, உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள ஈரான் விரும்புகிறது என்றும் கூறி இருந்தார்.

ஆனாலும், போர் முடிவுக்கு வராத பட்சத்தில், ஈரான் அணுசக்தி மையங்கள், திட்டங்கள் பற்றிய தகவல்களை தருவோருக்கு ரூ.170 கோடி வெகுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. அந்நாட்டு வெளியுறவுத் துறையின் ரிவார்ட்ஸ் ஆப் ஜஸ்டிஸ் (Rewards Of Justice) என்ற திட்டத்தின் கீழ் இந்த பரிசு தரப்படுகிறது.

அணுசக்தி மையங்கள், அதில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பற்றிய விவரங்கள், பணியாற்றும் விஞ்ஞானிகளின் விவரங்கள், பற்றிய தகவல்களை அளிப்போருக்கு இந்த பரிசுத் தொகை தரப்படும் என்று அறிவித்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us