தமிழகத்தில் இன்று எந்த மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று எந்த மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் அறிவிப்பு
UPDATED : நவ 10, 2026 10:47 PM
ADDED : நவ 10, 2026 07:56 AM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பு;
நவ.10ம் தேதியான இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
இவ்விரு மாவட்டங்கள் தவிர, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்காலிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.
நவ.11ம் தேதி தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை யெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
