/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
31 வது டிஎஸ்எஸ், கிழக்கு தில்லி - அய்யப்ப பூஜை
/
31 வது டிஎஸ்எஸ், கிழக்கு தில்லி - அய்யப்ப பூஜை
டிச 11, 2025

டில்லி வசுந்தரா என்க்ளேவ், தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில் 31 வது அய்யப்ப பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, அன்றைய நிகழ்ச்சி , கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.பிறகு ஐயப்பன், விநாயகர் மற்றும் முருகனுக்கு தீபாராதனை நடைபெற்றது. பந்தல் அழகாக அலங்கரிக்கப்பட்டு, அடுத்த நாள் நடைபெறவிருந்த லக்ஷார்ச்சனை க்காக தீபங்களை தயார் செய்து வைக்கப்பட்டது.
டிசம்பர் 7 அன்று நிகழ்ச்சி கணபதி ஹோமம் மற்றும் ருத்ராபிஷேகம் மூலம் தொடங்கி, 100-க்கும் மேற்பட்ட சங்கல்பங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் பக்தர்கள் எல்லோரும் லக்ஷார்ச்சனை யில் பங்கு பெற்றனர் அதனைத் தொடர்ந்து, மகளிர் குழுவினரால் ஹரிநாம கீர்த்தனம் பாடப்பட்டது. பின்னர், மும்பை ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன் சம்ப்ரதாய பஜனை எல்லோரும் கேட்டு ரசித்தனர் .
தொடர்ந்து பாரம்பரியமான சாஸ்தா பிரீதி, அனைத்து பக்தர்களுக்கும் குமார் கேட்டரர்ஸ் ஏற்பாடு செய்த மஹா பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அன்னதானத்தில், டி எஸ் எஸ் இன் “எல்லோரும் கடவுளின் முன் சமம்” என்ற கொள்கையை பின்பற்றி, பிரதான சாலையிலும், தேவையான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் லலிதா சஹஸ்ரநாமம் மண்டலி யினரால் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பாலகிருஷ்ணா மறார் மற்றும் குழுவினர் அற்புதமான நடன நிகழ்ச்சி அனைத்து பார்வையாளர்களையும் மகிழ்வித்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, எம் சி டி - கவுன்சிலர் முனிஷ் தேடாஜி ஆகியோரை டி எஸ் எஸ் நிர்வாகம் கவுரவித்தனர் . இறுதியில் 'படி பாட்டு' , தொடர்ந்து மற்றும் ஐயப்பனின் அருள்பெற்ற 'ஹரிவராசனம்' மூலம் விழா நிறைவு பெற்றது.
டி எஸ் எஸ் நிர்வாகம் அனைத்து ஸ்பான்சர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் அர்ப்பணிப்பு சேவைக்கும். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கிய ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலய நிர்வாகத்திற்கும் டி எஸ் எஸ் நிர்வாகம் நன்றி தெரிவித்தனர் .
தர்மம் சாஸ்தா சேவா சமிதி, வசுந்தரா என்க்ளேவ் , ஒரு பதிவு செய்யப்பட்ட சமூக கலைநெறி தொண்டு அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அய்யப்ப பூஜை ஒரு சிறப்பான முறையில் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதே சமயம், வசுந்தரா என்க்ளேவ் சுற்றுப்புறங்களில் பல தன்னார்வத் தொண்டு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில், ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல், குடிநீர் விநியோகம் செய்தல், எம் சி டி பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் எழுத்து பொருட்களை வழங்குதல், ஐ கேர் மருத்துவமனையுடன் இணைந்து கண் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி, பி பி எல் குடும்ப மாணவர்களுக்கு நிதி உதவி போன்ற பல சேவைகள் நடத்தியுள்ளது . இப்பணிகளை கடந்த 31 ஆண்டுகள் டி எஸ் எஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
