/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சத்பரி சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமத்தில் சாஸ்தா ப்ரீதி
/
சத்பரி சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமத்தில் சாஸ்தா ப்ரீதி
சத்பரி சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமத்தில் சாஸ்தா ப்ரீதி
சத்பரி சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமத்தில் சாஸ்தா ப்ரீதி
டிச 11, 2025

சத்பரி சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமத்தில் சாஸ்தா ப்ரீதி
புதுதில்லி: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, சத்பரி சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் சாஸ்தா ப்ரீதி நடைபெற்றது.
முதல் நாள் (டிச-6) திருப்புகழ் அன்பர்கள் திரளாக பங்கேற்று அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை மனமுருகி பாடினர்.
இரண்டாம் நாள் (டிச-7) காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து, கலச ஸ்தாபனம், லகுன்யாச ஏகாதச ருத்ர பாராயணம், 11 வாசனை திரவியங்களுடன், ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஓத, பஞ்ச வாத்திய முழக்கத்துடன், வேத பண்டிதர்கள் கலசங்கள் ஏந்தி வந்தனர்.
பிறகு, ஆசிரமத்தில் உள்ள அனைத்து தெய்வ சன்னதிகளும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பஞ்ச வாத்தியம் வாசித்தபோது, தர்ம சாஸ்தாவின் வருகையை நம்மால் உணர முடிந்தது. குறிப்பாக தர்ம சாஸ்தாவான ஐயப்ப சுவாமியின் கோயில்களில், பஞ்ச வாத்தியம் அவரது ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான இசையாகக் கருதப்படுகிறது.
டில்லி பாலகோகுலம் குழுவைச் சார்ந்த பாகவதர்கள் விஸ்வநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று நாம சங்கீர்த்தன பஜனையை தொடங்கினர். பாண்டுரங்கன் மற்றும் அனுமனைப் போற்றிப் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. சென்னை ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலியில் இருந்து கலந்து கொண்ட, ஸ்ரீ தயானானந்த் பாகவதர் சாஸ்தா வரவு பாடலை பாடினார். கூடியிருந்த பக்தர்கள் அவரிடையே சாஸ்தாவின் இருப்பைக் கண்டனர்.
சாஸ்தா வரவு
ஐயப்பன்/சாஸ்தாவின் வருகையை விவரிக்கும் சம்பவமாகும். இந்தப் பாடல்கள் ஐயப்பனின் கம்பீரமான பிரவேசத்தைத் தெளிவாக விவரிக்கின்றன, பெரும்பாலும் அவரது தோற்றம், அவரது பூதங்களின் (பணியாளர்கள்) பரிவாரம் மற்றும் அவரது வருகையைச் சுற்றியுள்ள பக்திச் சூழலைக் குறிப்பிடுகின்றன.
தொடர்ந்து, 18 படிகளில் கற்பூர வழிபாடு செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஜயப்பன் அருள் பாலித்தார். கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஐயப்பனின் அருட்கொடை மற்றும் ஆடம்பரமான மகா பிரசாதம், குறிப்பாக கேரள உணவு வகைகளை வழங்கி மகிழ்ந்தனர்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
