
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா செக்டர் 62 ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் ஆடி வெள்ளியை முன்னிட்டு , வில் 'விளக்கு பூஜை' நடைபெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜை சங்கர் சாஸ்திரிகள், கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ராவின் உதவியுடன் நடந்தன. பூஜை மஹா தீபாராதனையுடன் முடிவடைந்து, மகா பிரசாதம் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. மேலும், கோயில் நிர்வாகம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலியின் மகளிர் பிரிவு, மற்றும் பக்தர்கள் பலத்த மழையை பொருட்படுத்தாமல் விளக்கு பூஜையில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்தது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
