
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தில்லி க்யாலா ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் வலையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனையுடன் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடிப்பெருக்கு
ஆடிப் பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடியின், 18வது நாளில் கொண்டாடப்படும் ஒரு தென்னிந்திய கலாச்சார விழாவாகும். நதிகளின் வருடாந்திர புத்துணர்ச்சியுடன், நீரின் உயிர்களை நிலை நிறுத்தும் பண்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்