
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுதில்லி: ஸ்ரீ தல்லபாக அன்னமாச்சாரியாவின் 617 வது ஜெயந்தி துவாரகா ஸ்ரீராம் மந்திரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டில்லி சகோதரிகள் எஸ். ஷைலஜா, எஸ். செளந்தர்யா குழுவினரின் இசைக் கச்சேரி நடந்தது. உமா அருண் வயலினும், ரத்துல் குமார் மிருதங்கமும் வாசித்தனர்.
தில்லி வாழ் இசைக் கலைஞர்கள் மற்றும் அன்னமய்யா சங்கீதாலயாவில் பயிலும் மாணவியர்கள் பலர் இதில் பங்கேற்று அன்னமய்யாவின் கீர்த்தனைகளை பாடினர். இசை ஆர்வலர்கள் இதில் திரளாக கலந்து கொண்டு மேலும் சிறப்பித்தனர்.
அன்னமாச்சார்யா ஜெயந்தி
அன்னமாச்சார்யா ஜெயந்தி என்பது தென்னிந்திய சங்கீத பாரம்பரியத்தில் ஒரு முக்கிய திருவிழா ஆகும். இது கவிஞர், அறிஞர், ஆச்சார்யா, அன்னய்யா என்று போற்றப்படுபவரின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்