/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவில்களில் 'ஆஷாட ஏகாதசி' பஜனைகள்
/
நொய்டா கோவில்களில் 'ஆஷாட ஏகாதசி' பஜனைகள்
ஜூலை 07, 2025

'ஆஷாட ஏகாதசி'யை முன்னிட்டு நொய்டா செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயக மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் மற்றும் நொய்டா செக்டார் 42ல் உள்ள சங்கர மடத்தில் பல்வேறு பஜனைகள் நடைபெற்றன.
நொய்டா கோவிலில் வி.விஸ்வநாதன் மகுழுவினரால் பஜனைகள் பாடப்பட்டன. மேலும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் சத்சங்கம், நொய்டா (வி எஸ் எஸ், நொய்டா), ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் விஎஸ்எஸ் பஜன் மண்டலி 'பஜன் சந்தியா' வழங்கினர்.
ஷயனி ஏகாதசி, மஹா ஏகாதசி, டோலி ஏகாதசி, பத்ம ஏகாதசி அல்லது தேவசயனி ஏகாதசி என்றும் அழைக்கப்படும் ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு, விஎஸ்எஸ் நொய்டா ஆன்ம தெய்வீக பஜனைகளை ஏற்பாடு செய்திருந்தது, அதைத் தொடர்ந்து ஹனுமான் சாலிசா பாராயணம் செய்து, சந்திரமௌலீஸ்வரருக்கு மகா ஆராதியுடன், அன்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது. மகா பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மழையைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் இரு கோயில்களிலும் பங்கேற்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்