/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தில்லிக் கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்
/
தில்லிக் கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்
தில்லிக் கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்
தில்லிக் கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்
டிச 11, 2024

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏழு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடையே பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியை தில்லிக் கம்பன் கழகம் நடத்தியது.
மோதிபாக்கில் அமைந்துள்ள தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் தில்லியின் ஏழு தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ' கம்பராமாயணம் போதிக்கும் அறிவுரைகள் 'என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. போட்டிக்குத் தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே வி கே பெருமாள், கல்வியாளர் பைரவி ஹரிகுமார் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
மோதிபாக் பள்ளியைச் சார்ந்த மாணவி ஷிவானி முதல் பரிசும், லோதி எஸ்டேட் பள்ளியைச் சார்ந்த மாணவி சந்தியா இரண்டாம் பரிசும், மந்திர மார்க் பள்ளியைச் சார்ந்த சாத்விகாஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றனர். மோதி பாக் நித்திஸ்ரீ, லோதி எஸ்டேட் தர்ஷினி ஆகியோர் ஆறுதல் பரிசுகள் பெற்றனர்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பது வரைக்கான ஓவியப் போட்டியில் தமிழ் மாணவர்களோடு பிறமொழி மாணவர்களும் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியைகள் தன கௌரி, ஷிவானி ஆகியோர் இப்போட்டிக்கு நடுவர்களாக இருந்தனர். போட்டியில் மந்திர மார்க் பள்ளியைச் சார்ந்த ஹர்ஷித் நோஹியா என்ற மாணவர் முதலிடம் பிடித்தார். ஆர்.கே.புரம் பள்ளியைச் சார்ந்த தனிஸ்கா இரண்டாம் இடத்தையும், த்ரிஷ்னா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மந்திர மார்க் பள்ளியைச் சார்ந்த ஓம் குமார், மோதி பாக் பள்ளியைச் சார்ந்த குருநாதன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
போட்டிகள் நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளைத் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலாளர் ஆர் ராஜு, முதல்வர் (பொறுப்பு) லதா ஐயர், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆனந்தவல்லி, சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
தில்லிக் கம்பன் கழகத்தின் செயலாளர் எஸ்.பி. முத்துவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இளைய தலைமுறையினரிடம் கம்பராமாயணத்தின் சிறப்புகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இளைய தலைமுறையினரிடம் கம்பராமாயணத்தின் சிறப்புகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இளைய தலைமுறையினரிடம் கம்பராமாயணத்தின் சிறப்புகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பரிசளிப்பு விழாவிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தகவல்: கே வி கே பெருமாள், நிறுவனர் - தலைவர்; எஸ். பி. முத்துவேல், செயலாளர், தில்லிக் கம்பன் கழகம்
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்