தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ இசைப்பள்ளி ஆண்டு விழா

இசைப்பள்ளி ஆண்டு விழா

இசைப்பள்ளி ஆண்டு விழா


ஏப் 16, 2026

Follow on GoogleFavourite on Google

ஏப் 16, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

இசைப்பள்ளி ஆண்டு விழா
தலைநகர் டில்லியில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கே ஆர் ஜே இசைப் பள்ளியின் 32 வது ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 12/4/2026) அன்று அருணா அசாப் வீதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இசைப் பள்ளியை நிறுவிய ஜெயராமன் ருக்மணி தம்பதியர் 50 களில் தலைநகரில் தடம் பதித்த தம்பதியர்.இசைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த குடும்பம். அந்த காலகட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இல்லத்திற்கு மிதிவண்டியில் சென்று சங்கீதம் வளர்த்தவர்கள். அவர்கள் வாழ்நாளுக்குப் பிறகு அவரது வாரிசுகள் நிர்மலா பாஸ்கர் டில்லியிலும் மறைந்த வித்யா ஜெயராமன் குடும்பத்தினர் மதுரை கிளையிலும் சங்கீத வகுப்புகளை தொடர்ந்து வருகின்றனர். இவ்வருட விழாவில் அவர்களின் வாரிசுகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . செல்வன் ராகேந்து வருண் ஐந்தாம் தலைமுறை என்பது குறிப்பிடத்தக்கது .
இவ்வருடம் ருக்மணி ஜெயராமின் 100 வருட விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்டது.இறைவணக்கம் பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து பாடிட விநாயகர் பூஜையுடன் இசை விழா தொடங்கியது.பள்ளி மாணவர்கள் ராகேந்து வருண், மோக்க்ஷா, அனன்யா கண்ணன், அனீஷா, உதிதி,, சாய் ஸ்ரீ ஷா, ஹர்ஷிதாபாடியதை தொடர்ந்துபள்ளி யின் மூத்த மாணவர்கள் செந்தில், அபிஷேக் பாடினார்கள். அவர்களைத்தொடர்ந்து அனகா மணிகண்டன், சாய் சுந்தர், முனைவர் ராமசாமி, முனைவர் கண்ணகுமார் பாடினார்கள் . ராதா வெங்கடாசலம் ருக்மணி அம்மாள் மேல் தான் இயற்றிய வரிகளை பாடி முதல் பகுதியை நிறைவு செய்தார்.தமிழ் சங்க இந்நாளைய செயலர் சத்யா அசோகன் , வெங்கடேசன் , முந்தைய கமிட்டி உறுப்பினர்கள் இரா முகுந்தன், உமா சத்யமூர்த்தி, மாலதி கண்ணன், சங்கர், உஷா வெங்கட் மற்றும் குச்சுப்புடி நடன கலைஞர்கள் சீதா நாகஜோதி, நாகஜோதி, சீனிவாச ராகவன், கம்பன் கழக தலைவர் கே வி கே பெருமாள் , கல்வியாளர் இந்து பாலா , சங்கீத விதூஷி வசந்தி ராவ் , குருவாயூர் மணிகண்டன், தீப்தி பல்லா, முனைவர் லெட்சுமி பொதுவால், மிருதங்க வித்வான் ஸ்ரீ ராம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.கம்பன் கழக செயலர் முத்துவேல் பொதுநல சேவையை பாராட்டி 'ஜன சேவா நிரதா' விருது வழங்கப்பட்டது.இளம் கலைஞர்கள் அனகா மணிகண்டன், அபிஷேக் நாயர், ரதூல் குமார் ஆகியோருக்கு வளரும் கலைஞர் விருது வழங்கப்பட்டது.மதிய உணவைத் தொடர்ந்து கோதை நாராயண் மாணவி அனன்யா கண்ணனின் பரத நிகழ்வு நடைபெற்றது.இசை நிகழ்ச்சிக்கு வயலினில் அரவிந்த் நாராயணனும் மிருதங்கத்தில் ரதூல் குமார், அர்ஜூன் அரவிந்தும் வாசித்து சிறப்பித்தனர்.
ஆண்டுவிழா நிகழ்வுகளை மீனா வெங்கி தொகுத்து வழங்கினார். நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us