ஏப் 15, 2026

நொய்டா கோவில்களில் பஞ்சாங்க படனம்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு , வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், நொய்டா, செக்டார் 62, அதன் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில், பிரம்மஸ்ரீ ஸ்ரீராம் வாத்தியாரால் 'பஞ்சாங்க படனம்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூஜைகளுக்கு பிறகு, பிரம்மஸ்ரீ ஸ்ரீராம் பஞ்சாங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், குறிப்பாக 'பராபவ' ஆண்டு (2026-27) குறித்து அனைவருக்கும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த பராபவ வருடத்தில் ஒவ்வொரு ராசி / நட்சத்திரத்தின் பொதுவான பலன்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஸ்ரீராம் வாத்தியாரை மூத்த உறுப்பினர் எஸ் வெங்கடேஷ் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் வி பி எஸ் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோவில் வாத்தியார்கள்மணிகண்டன், மோஹித் மிஸ்ரா ஆகியோரால் காலையில் அனைத்து சன்னதியிலும் சிறப்புஅபிஷேகம் செய்த பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனைக்குப் பின் பானகம், நீர் மோர், வழங்கப்பட்டது. நொய்டாவில் செக்டார் 22ல் உள்ள வி பி எஸ் நிர்வகித்து வரும் வரசித்தி விநாயகர் கோவிலில் இதே போன்ற 'பஞ்சாங்க படனம்' நடைபெற்றது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்
