/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
காருண்ய மகா கணபதி கோவிலில் ருத்ர ஜபம்
/
காருண்ய மகா கணபதி கோவிலில் ருத்ர ஜபம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் சதுர்த்தி விழாக்கோலம் எல்லா கோவில்களிலும் களைகட்ட தொடங்கி விட்டது.
தலைநகர்
மயூர்விகார் 2 காருண்ய மகா கணபதி கோவிலில்.ஆகஸ்ட் 22 முதல் தொடங்கி .28
தேதி வரை ஒவ்வொரு நாளும் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை,
ஹோமங்கள் நடைபெறுகிறது.
அதன் ஒருநாள் நிகழ்வாக
மகன்யாசம் ஏகாதச ருத்ர பாராயணம் குருஜி சந்திரசேகர் தலைமையில் சுமார்
நாற்பது வித்வத்துக்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக ருத்ரம் பாராயணம்
செய்தனர்.
நிறைவாக இறைவனுக்கு கலச அபிஷேகம்
செய்விக்கும் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து
கொண்டு இறைவனின் அருளுக்கு பாத்திரமானார்கள்.மகா பிரசாதம் அனைவருக்கும்
வழங்கப்பட்டது.கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செவ்வனே செய்திருந்தனர்.
