
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடெல்லி : லோதி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண கேந்திராவில் நடைபெற்றது. ஸ்ரீ ருத்ர நமகம், சமகம் மற்றும் புருஷ ஸூக்தம் பாராயணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கணபதி பூஜை, கலச பூஜை மற்றும் பிராண பிரதிஷ்டை நடத்தப்பட்டன.
சுவாமி அவ்யயானந்தாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைப்பு பக்தி விசாரம் பற்றி உரையாற்றினார். தற்போது டெல்லி சின்மயா மிஷனில் வசிக்கும் ஆன்மீக வழிகாட்டியாகவும் உள்ளார்.
ரமண கேந்திராவின் துணைத் தலைவர் பாட்டியானி அவரை வரவேற்றார். பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேச சாரத்தை வாசித்தனர்.
அக்ஷர மணமாலை பாடி, ஆராதனையுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்