
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்த்திகை பண்டிகையையொட்டி, நொய்டா செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றினர். கோவில் வளாகம் முழுவதும் சுமார் 1000 தீபங்கள் ஏற்றப்பட்டன. அனைத்து வயதுடைய பக்தர்களும் கலந்து கொண்டனர். பக்தர்கள் 'ஹரோ ஹரா' என்று கோஷமிட்டபடி காணப்பட்டனர். தமிழகத்தின் 'திருவண்ணாமலையில்' நடைபெறுவது போல் இந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும், நொய்டா செக்டார் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலிலும் இதே போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து பூஜைகளும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, ஜெகதீஷ் சிவாச்சாரியார் உதவியுடன் நடந்தன.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
