/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவிலில் யஜுர் வேத உபகர்மா
/
நொய்டா கோவிலில் யஜுர் வேத உபகர்மா

ஆவணி மாதத்தில், 'அவிட்டம்' நட்சத்திர நாளில், யஜுர் வேத உபகர்மா முன்னிட்டு, செக்டர் 62, நொய்டா ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், பக்தர்கள் தங்களது பூணூலை மாற்றுவதற்காக அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர் . இதை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (வி.பி.எஸ்) பிரம்மஸ்ரீ ஸ்ரீராம் வாத்தியார் நடத்தி வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில், ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீராம், தவிர மூத்த உறுப்பினர் ஸ்ரீ சி எ சுப்பிரமணியம் , யஜுர் வேத உபகர்மா வின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறினார். மேலும் அனைத்து பக்தர்களும் மூன்று வேலைகளிலும் 'சந்தியா வந்தனம்' செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்வு மகாதீபாராதனையுடன் முடிந்தது, மற்றும் பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ,பூணூலை மாற்றுவதற்காக செக்டர் 62 கோவிலுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது .