sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

நாசிக் தமிழ் சங்க சித்திரை திருவிழா

/

நாசிக் தமிழ் சங்க சித்திரை திருவிழா

நாசிக் தமிழ் சங்க சித்திரை திருவிழா

நாசிக் தமிழ் சங்க சித்திரை திருவிழா


ஏப் 16, 2025

ஏப் 16, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாசிக் தமிழ்ச் சங்கம் சித்திரை திருவிழாவை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடினர். நாசிக் ராவ் சாஹிப் தோரட் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த திரவிழா, தமிழ்ச்சங்கத் தலைவர் பி.ராமமூர்த்தி தலைமையில் இனிதே துவங்கியது. சங்க ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்க, குத்துவிளக்கு ஏற்றிய பின் தலைவர் பி.ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர் நித்தின் பாபு ராவ் தாக்குரே (செயலாளர் மராட்டிய சமாஜ் பிரசாக்), ராகுல் ராமச்சந்திரன் (தாளாளர் நாசிக் கேம்பிரிஜ் பள்ளி) இணைந்து திருவள்ளுவர், அம்பேத்கர், வீரசிவாஜி திருவுருவப் படங்களை திறந்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின் தமிழ் தாய் வாழ்த்து உடன் விழா ஆரம்பிக்கப்பட்டது. தமிழை வரவேற்று ஸ்ரீ ஹர்ஷா அளித்த பரதநாட்டியம் மிகச் சிறப்பாக அமைந்தது.

தலைவர் தமது உரையில், நாசிக் தமிழ் சங்கம் தமிழர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மகாராஷ்டிர குறிப்பாக நாசிக் பகுதியில் உள்ள மக்களின் மேம்பாடு, கல்வி வளர்ச்சி, மருத்துவ சேவையாக ரத்ததான முகாம், தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகள் நடத்தி வருவது பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். மேலும் நம் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் பல நற்பணிகளை நாசிக் தமிழ்ச் சங்கம் முன்னின்றி செயலாற்றி வரும் என்பதை உறுதியுடன் தெரிவித்தார்.


ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு விழாவில் நாசிக் தமிழ்ச் சங்கம் சாதனையாளர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்து வருவது மிக பாராட்ட வேண்டிய ஒன்று. அந்த வகையில் நாசிக் நகரை சேர்ந்த கவிதா என்ற மாரிச்செல்வி மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பெற்றதையொட்டி வாழ்த்தி பெருமைப்படுத்தியது நாசிக் தமிழ் சங்கம்.


மேலும் இந்த சித்திரை திருவிழாவில் பெங்களூரைச் சார்ந்த முனைவர் இரா இந்திரா பாய் எழுதிய சரித்திர நாயகன் இரண்டாம் சரபோஜி என்ற புத்தகங்களை நாசிக் தமிழ் சங்கத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் வழங்கினார். புதுச்சேரியைச் சார்ந்த முனைவர் என்.எஸ்.கே. கலைவரதன் எழுதிய கண்ணதாசன் பற்றிய புத்தகங்களும் தமிழ் புத்தாண்டு பற்றிய புத்தகங்களும் நாசித் தமிழ் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.


தமிழ் புத்தாண்டு திருவிழாவினை செயற்குழு உறுப்பினர்கள் மிகச் சிறப்பான முறையில் நடத்தித் தந்தது மிகப்பெரிய பாராட்ட வேண்டிய செயலாகும். பெருந்திரளான கூடியிருந்த நாசிக் வாழ் தமிழர்களை அனைவரையும் மகிழ்விக்கும் வகைழில்சன் சைன் சிம்பொனி இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. துள்ளல் இசையோடு ஆரம்பிக்கப்பட்ட இசை நிகழ்ச்சி தமிழ் மக்கள் ஆடிப்பாடி ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.


மிகச் சிறப்பான இந்த நிகழ்ச்சியை ராமமூர்த்தியின் வழிகாட்டுதலின் பேரில், நாசிக் தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்களும் நாசிக் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து விசுவாசுவ வருட தமிழ் புத்தாண்டினை வரவேற்றனர்.


- நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்







      Dinamalar
      Follow us