
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமி ஆசிரமத்தில் 3வது ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் ஆகஸ்ட் 10 மற்றும் 11, தேதிகளில் மிக விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை வேளச்சேரி (கிழக்கு) தாம்பிராஸ் பிரிவு நாத சுதாவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை கானஸ்ம்ருதி பஜன் மண்டலியினர் ராதா கல்யாண வைபோகத்தை நடத்தி வைத்தனர். ஆன்மிக அன்பர்கள் இதில் திரளாக பங்கேற்று ஶ்ரீ ராதா ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமியின் ஆசிகளை பெற்றனர்.
- நமது செய்தியசளர் எம்.வி.தியாகராஜன்