ஐ.என்.எஸ்., வாக் ஷீர் என்பது, ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும். நிலத்தில் இருந்து வரும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளை எதிர்க்கும் திறன் இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு உள்ளது.
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் 2வது ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.