அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை கவர்னர் மாளிகையில் நடந்தது. இவ்விழாவில் தங்கள் பாரம்பரிய நடனமாடிய அருணாச்சல பிரதேசமாநில கலைஞர்களுக்கு தமிழக கவர்னர் ரவி நினைவு பரிசு வழங்கினார். இடம் : கிண்டி.
மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் இணைந்து வழங்கும் அ ரா ஆ வன்னா அரிச்சுவடி ஆரம்பம்.வடபழனி முருகன் கோவில் நேற்று நடந்தது இதில் பங்கேற்ற ரவி முருகையா.
தீமையை அழித்து நன்மை வெல்லும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக தசரா பண்டிகை அன்று ராவணனை ராமர் வதம் செய்யும் நிகழ்வு வட மாநிலங்களில் நிகழ்த்தப்படுவது வழக்கம். இதற்காக ராவணன் உருவ பொம்மைகளை கடையில் இருந்து வாங்கி சென்ற சிறுவர்கள். இடம்: மீரட், உத்தரபிரதேசம்.
ஊட்டியின் இயற்கை அழகையும், குளிர்ந்த சூழலையும் விவரிக்கும் ஒரு அழகான படகு இல்ல ஏரியில் சுற்றுலா பயணியர் இதமான காலநிலைகளை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில், முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நவராத்திரி ஒன்பதாம் நாளான நேற்று, மதுரை பெத்தானியாபுரம், தேவி கருமாரியம்மன் கோவிலில், சிவனுக்கு அம்மன் அபிஷேகம் செய்யும் சிறப்பு அலங்காரத்தில், சக்தி கொலுவில் பக்தர்களுக்கு அரும்பாலித்த அம்மன்.