கடலூர் உழவர் சந்தை முன் நடை பாதை கடைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிச்சலுக்கு தீர்வு காண போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகள் வைத்தனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ரிக் ஹெர்மினியை, அவரது இல்லத்தில் நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மோந்தா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர். ஆழ்கடல் மீன் பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.