பனியால் உறைந்திருந்த ஜம்மு- காஷ்மீர் தால் ஏரி, தற்போது வெயில் எட்டிப் பார்த்ததால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலா பயணியரை ஏற்றிச் செல்லும் பாரம்பரிய படகு இல்லங்கள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிட்டாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.