மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இடம் : திருவான்மியூர்.
உலக மலை ரயில் பாரம்பரிய தின நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடந்தது. இந்த நாளில் மலை ரயிலில், ஊட்டிக்கு மகிழ்ச்சியில் செல்லும் சுற்றுலா பயணி.
சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக, மை வைத்த விரலை காட்டி வாக்காளர்கள் இலவசமாக டீ குடிக்கலாம் என சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் பேனர் வைத்துள்ளனர். இது ஓட்டு போடுவதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு உற்சாகமான முயற்சி என்கிறார் அந்த கடைக்காரர்.
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த குஷ்பூவை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொண்டர்கள்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி