தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டதால் அதிகாலை வேளையில் செந்நிற கதிரவனின் அழகிய ஒளியில் சென்னை காசிமேடு கடற்கரையில் பைபர் படகுகளில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே கோவில் கட்ட பள்ளம் தோண்டி போது கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரண்டு மண் குவளைகள் கிடைத்தன. அவை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை என தெரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 292 செவிலியர்களை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் ஜே.ஆர்., காய்ன்ஸ் அண்ட் ஜென்ஸ் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்தோனேசியா நாட்டு கரன்சி நோட்டில் உள்ள விநாயகர்.