சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தினமும் கொட்டப்படும் குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள சதுப்பு நிலத்தில் கலந்து அப்பகுதியே கருமஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் சென்னையின் நன்னீர் பகுதியாக விளங்கும் சதுப்பு நிலம் கழிநீர் குட்டையாகி நிலத்தின் தன்மையே மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
லடாக்கின் கார்கிலில் உள்ள எல்லை பகுதியை 1999ல் பாகிஸ்தான் ஆக்கிரமிக்க முயன்றது. அவர்களுடன் போரிட்டு விரட்டியடித்த நம் ராணுவத்தின் வீர தீர செயல் கார்கில் வெற்றி தினம் என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜூலை 26ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லடாக்கின் திராஸ் என்ற இடத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற நம் பாதுகாப்பு படையினர்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அனைந்திந்திய மாணவர் சங்கம் சார்பில் பீஹாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது மாணவர்கள்- போலீசார் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியது. பாட்னாவில் நடந்த வன்முறையில் போலீஸ் வாகனத்தை கவிழ்த்த போராட்டக்காரர்கள்.
மஹாராஷ்டிராவின் மிக முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஆடி ஏகாதசியும் ஒன்று. இந்நாளில் விஷ்ணு பகவானை வழிபட பாரம்பரிய உடை அணிந்து தாளங்களை இசைத்தபடி ஊர்வலமாக செல்வது வழக்கம். அப்படி நடந்த ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகள். இடம்: தாதர், மும்பை.
குஜராத் மாநிலம் சூரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீதி காடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் ஒரு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர்.