ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு வி.எச்.பி., அமைப்பு ஏற்பாட்டில் திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச மண்டபத்திற்கு பெண்கள் சீர்வரிசையுடன் வந்து தாமிரபரணி நதியை கர்ப்பிணியாக பாவித்து சிறப்பு பூஜை நடத்தினர்.
கோவையில் பல இடங்களில் இது போன்று தோண்டப்படும் சிறு குழிகளுக்கான வேலைகளை சீக்கிரம் முடித்தால் பாதசாரிகளின் பாதங்கள் நன்றி சொல்லும். இடம்: டாக்டர் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம்.
கேரளாவில் மழை, கர்நாடகாவில் காவிரி பிரச்னை காரணமாக பெரும்பாலான சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணியரின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இடம்: குன்னூர் சிம்ஸ் பூங்கா.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கொச்சியில் உள்ள ஆலுவா சிவன் கோவில் மழை வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. எனவே பெண் ஒருவர் தூரத்தில் இருந்தே வழிப்பட்டார்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலையை பந்தலில் வைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில் பாலம் அமைந்துள்ளது. 4314 அடி நீளம், 44 அடி அகலம் நதியில் இருந்து 1,177 அடி உயரத்தில் அமைந்துள்ள செனாப் பாலத்தின் ஜம்முவின் காத்ரா- காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர் இடையே பயணித்த வந்தே பாரத் ரயில்.
தஞ்சாவூர் மாவட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் வயல்களில் குவிந்து நெற்பயிரை பிடுங்கி, தண்டுகளை உணவாக உட்கொண்டு வரும் அரியவகை பறவையான நீலத்தாழை கோழிகள். இடம்: தென்பெரம்பூர்.