பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சிட்கோ பகுதியில் போக்குவரத்து போலீசார் மற்றும் ரத்தினம் கல்லூரி மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் மற்றும் நகராட்சி கமிஷனர் நாகராஜ் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் சிறுபான்மையிருக்கான புதிய 15 அம்சத் திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடந்தது.
வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்து பழைய தொழிலாளர்களை நீக்குவதாக கூறி மதுக்கரை ஏ.சி.சி., அதானி சிமெண்ட் தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் .