நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஆண்டு திருவிழா நாளை மறுநாள்( ஆக.,29) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக சர்ச் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இன்றி அன்றாடம் உழைக்கும் வர்க்கமாக தொழிலாளர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் தூய்மை பணியாளர்கள். இடம்: வேலூர் சாலை, திருவண்ணாமலை.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர். அவர்களை அமைச்சர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இடம்: சென்னை விமான நிலையம்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்குவதற்காக தயாராகும் பொன் வண்ண மண்பாண்டங்கள்.
பசுமை செழிக்கட்டும்: கவாத்து செய்யப்பட்ட மல்பெரி செடிகளில் இலைகள் தளிர்விட்டு பசுமை நிறைந்து காணப்படுகின்றன. இது காண்போரை வசீகரிக்கிறது. இடம்: திருப்பூர்,உடுமலை பெரியகோட்டை.
குட்டையில் நீர் தேங்கி உள்ள நிலையில் அல்லிஇலைகள் வளர்ந்துள்ளன. இதில்மலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ' குடி'மகன்கள் குட்டையினுள் பீர்பாட்டில்களை வீசி உள்ளனர். இடம்: கோவை, பொள்ளாச்சி திவான்சாபுதூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்க வன ஊழியர்கள் தேடுதல் பணியில்ஈடுபட்டுள்ள அடர்ந்த வனவப்பகுதி சூழ்ந்த லார்ஸ்டன் மலைபகுதி.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் துணைமேயர் சாரதா தேவி இருக்கையை மேடையின் கீழ் போட வேண்டும் என மேயர் ராமச்சந்திரன் கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத்ததில் ஈடுபட்ட சாரதாதேவி.