திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சியில் வழித்தடத்தை மறைத்து சைட்டுகளை விற்பனை செய்த விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள்.
சாலை பாதுகாப்பு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து போலீசார் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து சென்னை அண்ணா சாலையில் வெயிலில் ஸ்பென்சர் சிக்னல் அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர்.
ஒரு புறம் நகரின் வளர்ச்சிக்கு செயல்படும் சோலாரும், இடையே பழமை மாறா ஓட்டு வீடுகளும் மறுபுறம் வளர்ந்து வரும் கட்டடங்களும் என கண்களுக்கு இனிமையாய் தென்படும் கோவையின் ஒரு பகுதி. இடம்: மேட்டுபாளையம் ரோடு.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பஸ் ஸ்டாப் அருகில் ரோட்டில் ஓட ஓட வாலிபருக்கு மீன் வெட்டும் கத்தியில் வெட்டு. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கிர்கிஸ்தானின் பிஸ்கெக் நகரில் துவங்கிய உலக நோமாட் விளையாட்டு போட்டி துவக்க விழாவிற்கு பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் ஒரே காரில் பயணம் செய்தனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் பன்னிரண்டாவது நாளாக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: ரிப்பன் மாளிகை.