திருநெல்வேலி மாவட்டம், கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் அருகே, பாப்பாங்குளத்தில் உள்ள கல் குவாரியை மூட வலியுறுத்தி, கிராமத்தினர் கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிந்துவெளி நாள் விழா நூல்கள் மற்றும் ஆய்விதழ் வெளியீட்டு நிகழ்ச்சி திருநெல்வேலி பொருநை அருங்காட்சியத்தில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபட்ட பெரிய விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக வந்தனர்.
உலக தென்னை தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம், பொள்ளாச்சி அருகே கோட்டூர் ஸ்ரீராம் முருகன் கலையரங்கத்தில் நடந்தது. இதில், சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது.