நம் நாளிதழில் விவசாயிகளின் நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகள் குறித்து செய்தி வெளியானது; நெல் முளைத்து விட்டால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுவர் என சொல்லப்பட்டிருந்தது. தற்போது மழையில் நெல் நனைந்து முளைவிட்டதை, காட்டும் விவசாயி. இடம்: காவாந்தண்டலம் அரசு நெல் கொள்முதல் நிலையம், காஞ்சிபுரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சுதர்சன் லேஅவுட்டில் நேற்று பெய்த கனமழையால், காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, தனியார் ஐ.டி., நிறுவன ஊழியரின் கார் சேதமானது
குஜராத் மாநில தேர்வு வாரியத்தால் பள்ளிகளில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு இன்று( செப்.,20) நடந்தது. அங்குள்ள ராஜ்கோட் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேர்வர்கள்.
விடுமுறை நாளான இன்று( செப்.,20) ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில்(10 மீ ஏர்ரைபிள்) ஒரே நாளில் தமிழகத்தின் இளவேனில் வாளறிவன், இரண்டு வெள்ளி வென்றார். தனி நபர் பிரிவில் கைப்பற்றிய வெள்ளிப் பதக்கத்துடன் இளவேனில். இடம்: நயோகா, ஜப்பான்.