மதுரையின் அட்சய பாத்திரம் சார்பில் நடந்த விழாவில் சென்னை மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணனுக்கு அட்சய சேவா ரத்னா விருதை பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் வழங்கினார். இடமிருந்து எஸ்.வி.எஸ்., நிறுவன இயக்குனர் சூரஜ், நடிகர் வையாபுரி, அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு.
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான 'ஜம்போ சவாரி' முடிவடைந்தவுடன், விழாவைச் சிறப்பித்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தசரா யானைகளை அலங்கரித்து பாரம்பரிய முறைப்படி சிறப்புப் பூஜை செய்து நேற்று வழிபட்டனர்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளுக்கு கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருவான்மியூரில் உயர்ந்த கட்டடங்களுக்கு பின்னால் திரண்டு நின்ற மேகக்கூட்டம்.