உள்ளடக்கத்திற்கு செல்லகார்கில் நகர் குளம் முழுவதும் நிரம்பி, உபரி நீர், உந்து நிலையத்தின் மின்மோட்டர் வழியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு கடத்தப்படுகிறது. இடம். திருவொற்றியூர்.

2/
கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை கோ-கோ போட்டி நடந்தது. இதில் திருப்பத்தூர், தூத்துக்குடி அணிகள் மோதின.

3/
கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள்.

4/
திண்டுக்கல்லில் பெய்த மழையால் கரூர் ரோட்டில் தேங்கிய தண்ணீரை வாரி இறைத்து சென்ற வாகனம்.

5/
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டியில் திருப்புவனம் அணியும் திருப்புத்தூர் அணியும் விளையாடின.

6/
கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் தென்னைகள் இதுவும் நம்ம கோவையிலுள்ள ஒரு பகுதி தானுங்க... இடம்: சிறுவாணி ரோடு

7/
மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலம் விடப்படும் உருளைக்கிழங்கு.

8/
திருப்பூரில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, தாராபுரம் ரோடு, விவேகானந்தா பள்ளியில் நடந்தது.

9/
ஊட்டியில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக , கூட்டுறவு கடைகளில் சன்ரைக அரிசி விற்பனை நடக்கிறது.

10/
காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.