தலைநகர் டில்லியில் குளிர்காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், காற்று மாசும் அதிகரித்து வருகிறது. இந்தியா கேட் அருகே, லாரி மூலம் தண்ணீர் தெளித்து காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டது.
துர்கா பூஜை ஒட்டி டில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள மைதானத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த துர்கா சிலையின் முன்பு பக்தர்கள் தங்களது குழந்தைகளை புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.