நாட்டின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நவம்பர் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளிலும் தெருக்களிலும் லட்சக்கணக்கான மண் அகல் விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம்.இதற்காக சுற்றுச் சுழலுக்கு கேடு ஏற்படுத்தாத மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குயவர். இடம்:குருகிராம்,ஹரியானா
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான 'ஜம்போ சவாரி' முடிவடைந்தவுடன், விழாவைச் சிறப்பித்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தசரா யானைகளை அலங்கரித்து பாரம்பரிய முறைப்படி சிறப்புப் பூஜை செய்து நேற்று வழிபட்டனர்.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளுக்கு கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருவான்மியூரில் உயர்ந்த கட்டடங்களுக்கு பின்னால் திரண்டு நின்ற மேகக்கூட்டம்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, அடுத்த மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், வீடுகளிலும், தெருக்களிலும் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். இதற்காக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண் விளக்குகளை தயாரிக்கும் மண்பாண்ட கலைஞர். இடம்: குருகிராம், ஹரியானா.
கோவை வஉசி பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள கணித பூங்கா பராமரிப்பு இன்றி இருப்பதாக சில நாட்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது புற்கள் நடும் பணி துவங்கியது.
தஞ்சாவூர் பெ ரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1041வது சதய விழாவை முன்னிட்டு திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.