உள்ளடக்கத்திற்கு செல்லஅழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவ 2ம் நாளான நேற்று சிராப்திநாதன் சேவையில் சுந்தரராஜ பெருமாள்.

2/
உடுமலை திருமூர்த்தி அணையில் மழை பெய்வதற்காக வானில் திரண்டு காணப்படும் கருமேக கூட்டம்.

3/
சென்னை பட்டாளம் கால்வாயில் தூய்மை பணியாளர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

4/
சிவகங்கையில் நடந்த மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியில் திருப்புவனம், இளையான்குடி அணியும் விளையாடின.

5/
மழை காரணமாக கொரட்டூர் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அங்கு இறைதேடி குவிந்துள்ள பறவைகள்.

6/
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், மழைக்காலத்தில் தங்குமிட வசதியின்றி முதியோர்கள் கழிவறை முன்பும் மரத்தடியிலும் தஞ்சமடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது

7/
புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள்.

8/
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்களில் தேங்கியுள்ள மழை நீரால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது..

9/
ஊட்டி ரோஜா பூங்காவில், சீசன் இல்லாதலால் குறைந்த எண்ணிக்கையில் ரோஜாக்கள் உள்ளது.

10/
சென்னை பசுமைவழிச் சாலையில் முதல்வர் விஜய்க்கு தயாராகும் அரசு இல்லம்.