தென்காசி மாவட்டம் குண்டாறு பகுதியில் பிசான நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை பறவைகளிடமிருந்து பாதுகாக்க புடவைகள் போர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்..
ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள நேரு நினைவு தாவரவியல் பூங்கா, இயற்கை அழகும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பூக்களுக்கும் பெயர் பெற்றது. இப்பூங்காவில் உள்ள மலர் தோட்டம் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை த.வெ.க., பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் திறந்து வைத்தார். வலமிருந்து எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், கல்லாணை.
திருப்பூர், மாநகராட்சி 25வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் தங்கராஜ் தனது வார்டு பகுதியில் தெரு விளக்கு பிரச்சனை சரி செய்ய கோரி மாமன்ற கூட்டத்திற்கு பல்பு மாலை அணிந்தபடியே மாமன்ற கூட்டத்திற்கு வந்தார்.