வட மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டத்தை தொடர்ந்து லட்சுமி பூஜை கொண்டாட மக்கள் தயாராகிவிட்டனர்.தீபாவளித் திருநாளையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு தேவைப்படும் பூக்கள் பல இடங்களில் பயிரிடப்பட்டுள்ளது. இடம்:நதியா மாவட்டம்,மேற்கு வங்காளம்
நீலகிரியில், 2009-ல் நடந்த நிலச்சரிவின் போது, மத்திய புவியியல் ஆய்வு மைய குழுவினர், மாநில அரசுக்கு அறிவுறுத்திய தகவல்கள் அடங்கிய செய்தி கடந்த, 10ல் ‘தினமலர்’ நாளிதழில் வெளியானது.
மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் கல்லுாரியில் நடந்த 1999ம் ஆண்டு முதல் 2025 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற நிர்வாக மேலாண்மையர் ராம்குமார்(வலமிருந்து 3வது). அருகில் முதல்வர் பாலன், சென்னை ஓ.எஸ்.எம். நிறுவன பொதுமேலாளர் கேப்டன் அபிஜித்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்த எச்.ஐ.வி எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள். இடம்: கோவை, கேரளா கிளப் ரோடு