தமிழகம்-கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில், தேனி மாவட்டத்தில் உள்ளது போடிமெட்டு. இங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் மண் சரிவு ஏற்பட்டு, மலைப்பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளன. போடி-மூணாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நாணயவியல் அமைப்பு சார்பில், தேசிய அளவிலான நாணயங்கள் மற்றும் பழம் பொருட்களின் மூன்று நாள் கண்காட்சி சென்னை எழும்பூர் சிந்து திருமண மண்டபத்தில் துவங்கியது.
புதுச்சேரி ஒயிட் டவுன் செயின்ட் லூயிஸ் வீதியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டின் எழுபதாம் ஆண்டு விழாவையொட்டி காமிக்ஸ் (சித்திர கதை) புத்தகங்களின் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட மக்கள்.