தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் யமுனை நதியும் சீர்கெட்டு வருகிறது. யமுனை நதியில் நேற்று அதிகாலை நச்சு நுரை படிந்து காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்த எச்.ஐ.வி எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள். இடம்: கோவை, கேரளா கிளப் ரோடு
சென்னையில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் ஏரிகளில் முன்னெச்சரிக்கையாக செடிகள் மற்றும் குப்பைகளை தீவிரமாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்இடம் : பெருங்குடி
விருத்தாசலம் அடுத்த டிவி புத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தது.தினமலர் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.