விருத்தாசலம் அடுத்த டிவி புத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தது.தினமலர் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.