/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
இந்திய கலாசாரத்தை காதலித்ததால் வெளிநாட்டவரை கரம்பிடித்த பெண்
/
இந்திய கலாசாரத்தை காதலித்ததால் வெளிநாட்டவரை கரம்பிடித்த பெண்
இந்திய கலாசாரத்தை காதலித்ததால் வெளிநாட்டவரை கரம்பிடித்த பெண்
இந்திய கலாசாரத்தை காதலித்ததால் வெளிநாட்டவரை கரம்பிடித்த பெண்
ADDED : டிச 29, 2025 06:40 AM

சித்ரதுர்காவின் செல்லகெரேயை சேர்ந்தவர் நாகராஜ். சிவில் இன்ஜினியரான இவர், 2005ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டிற்கு சென்று ஆக்லாந்தில் வேலை செய்து அங்கேயே குடியேறினார். இவரது மகள் பூஜா, 25. ஆக்லாந்திலேயே படித்த இவர், தற்போது கண் மருத்துவராக உள்ளார்.
பூஜாவும், நியூசிலாந்தின் நடியரே பகுதியில் வசிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியரான கெ ம்பல் வில்வோர்த்தும், கடந்த 24ம் தேதி தாவணகெரேயில் உள்ள ரி சார்ட்டில் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் குறித்து பூஜா கூறியதாவது:
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வசிக்கும் நானும், நடியரேவில் வசிக்கும் கெம்பலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தோம். எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின் காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக காதலித்தோம்.
நான் இந்திய பெண் என்பதால், நம் நாட்டின் பழக்க வழக்கம், கலாசாரம் குறித்து, கெம்பல் என்னிடம் எப்போதுமே பேசுவார். நம் கலாசாரத்தை அவர் காதலித்தார். இதனால், அவரை எனக்கு பிடித்தது. எங்கள் காதலை பற்றி, இரு குடும்பத்தினருடன் சொன்ன போது சம்மதம் தெரிவித்தனர்.
இந்திய முறைப்படி தான் திருமணம் செய்ய வேண்டும் என்று, நாங்கள் இருவருமே ஆசைப்பட்டோம். அதற்கான தேதியையும் குறித்தோம். தாவணகெரேயில் உள்ள ரிசார்ட்டில் முன் பதிவு செய்து, இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்தின் போது அவர் வேட்டி, சட்டை, தலைப்பாகை அணிந்திருந்தார். நான் பட்டு புடவை, நகைகள் அணிந்திருந்தேன். இந்திய முறைப்படி திருமணம் நடந்ததில் கெம்பலும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். திருமணத்தில் வெளிநாட்டில் இருந்து நெருங்கிய நண்பர்கள் வந்து கலந்து கொண்டனர். நாம் எந்த நாட்டிற்கு சென்றாலும் நமது கலாசாரத்தை மறந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

