தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ பல்லாரி மண்டல நிர்வாக அதிகாரியை மிரட்டிய பெண் டி.ஐ.ஜி., வர்த்திகா

 பல்லாரி மண்டல நிர்வாக அதிகாரியை மிரட்டிய பெண் டி.ஐ.ஜி., வர்த்திகா

 பல்லாரி மண்டல நிர்வாக அதிகாரியை மிரட்டிய பெண் டி.ஐ.ஜி., வர்த்திகா


ADDED : பிப் 09, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லாரி: தன்னை கேட்காமல் கோப்புகளை வழங்க கூடாது என்று, பல்லாரி மண்டல நிர்வாக அதிகாரியை, இடமாற்றம் செய்யப்பட்ட பெண் டி.ஐ.ஜி., வர்த்திகா கட்டியார் மிரட்டிய, மொபைல் போன் உரையாடல் வெளியாகி உள்ளது.

பல்லாரி டவுன் அகம்பாவியில் உள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன், வால்மீகி சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டதால், கடந்த மாதம் 1ம் தேதி இரவு பல்லாரியில் கலவரம் ஏற்பட்டது. துப்பாக்கி குண்டு பாய்ந்து, காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் ரெட்டி இறந்தார்.

இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரித்து வரும் நிலையில், பணியில் அலட்சியமாக செயல்பட்ட பல்லாரி எஸ்.பி., பவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெண் டி.ஐ.ஜி., வர்த்திகா கட்டியார் இடமாற்றம் செய்யப்பட்டார். தனது இடமாற்றத்தை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்நிலையில், பல்லாரி மண்டல நிர்வாக அதிகாரி பசவராஜிடம் மொபைல் போனில், கடந்த 6ம் தேதி பேசிய வர்த்திகா கட்டியார், 'எனது இடமாற்றத்தை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்.

என்னை கேட்காமல் புதிதாக வந்து உள்ள ஐ.ஜி.,க்கு எந்த கோப்பும் வழங்க கூடாது. எப்படியும் நான், மீண்டும் பல்லாரிக்கே வந்து விடுவேன். ஒருவேளை ஐ.ஜி., கேட்கும் கோப்புகளை கொடுத்தால், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் நடக்கும் வழக்கில் உங்களையும் பிரதிவாதியாக சேர்த்து விடுவேன்' என்று மிரட்டினார்.

இந்த உரையாடல் ஆடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், வர்த்திகா கட்டியாருக்கு, பசவராஜ் எழுதிய கடிதத்தில், 'உங்கள் உத்தரவு, எனது பணியை செய்வதற்கு இடைஞ்சலாக இருப்பது போன்று உணருகிறேன். இனி எனக்கு கடிதம் மூலமோ, வாய்மொழியாகவோ எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்' என குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us