sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

 1. 2.. 3... கேம் ஆன்

/

 1. 2.. 3... கேம் ஆன்

 1. 2.. 3... கேம் ஆன்

 1. 2.. 3... கேம் ஆன்


ADDED : நவ 28, 2025 05:40 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: l மாநில மகளிர் கூடைப்பந்து போட்டியில், தென் மேற்கு ரயில்வே மகளிர் அணி காலிறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இந்த அணியின் வீராங்கனை ஸ்ருதி, 20, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

l மாநில அளவிலான, 'ஸ்னுாக்கர்' போட்டியில், சப் - ஜூனியர் ஆடவர் பிரிவில் பெங்களூரை சேர்ந்த முகமது முஸ்தபா தங்க பதக்கம் வென்றார்.

l பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும், கூச் பெஹர் கோப்பை 19 வயதுக்கு உட்பட்ட ஆடவருக்கான டெஸ்ட் போட்டியில், ஹிமாச்சல் பிரதேச அணியை கர்நாடக அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

l தெலுங்கானாவில் நடந்த ஆனந்த் பஜாஜ் ஓபன் பேட்மின்டன் கலப்பு இரட்டையர் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், மைசூரு பிரகதி எலைட் பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் விஷால் உத்தப்பா, ஹன்சிகா ராகேஷ் தங்க பதக்கம் வென்றனர்.

l பெங்களூரில் நடக்கும் மாநில அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி காலிறுதியை எட்டியுள்ளது. இதில், சிக்கமகளூரு அணியை சேர்ந்த சுமந்த், 23, ஷஷாங்க், 19, ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்களின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

l மைசூரில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டியில் மார்லின் அக்வாடிக் சென்டர் மகளிர் அணியினர் வெண்கல பதக்கம் வென்றனர்.

l தெற்கு மண்டல மகளிர் ஊர் காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில், ஒட்டுமொத்த போட்டிகளில் முதல் பரிசை மைசூரு மாவட்ட ஊர் காவல் படை அணி வென்றது

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us