ADDED : ஜூன் 04, 2026 11:03 PM
பெங்களூரு: பெங்களூரு கன்டீரவா மைதானத்தில், மாநில அளவிலான, சீனியர் பிரிவினருக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின.
கர்நாடக சீனியர் தடகள வீரர்கள் சந்திப்பு எனும் பெயரில், மாநில அளவிலான சீனியர் பிரிவினருக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் துவங்கின; இன்றுடன் முடிவடைகிறது.
இதை கர்நாடகா தடகள வீரர்கள் அசோசியேஷன்ஸ் நடத்துகிறது. இந்த சந்திப்பில் ஆயிரக்கணக்கான தடகள வீரர்கள் பங்கேற்பர். நீச்சல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கும்.
ஒவ்வொரு வகை போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும், தலா 3 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் வரும், 24 முதல் 28ம் தேதி வரை, ஒடிஷா புவனேஸ்வர் நகரில், மாநிலங்களுக்கு இடையே நடக்கும் தடகள போட்டியில் பங்கேற்பர்.
இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களே, வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி சார்பாக போட்டியிடுவர். எனவே, கர்நாடக சீனியர் தடகள வீரர்கள் சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
