உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் பெங்களூரில் பயிற்சி ஆட்டம்
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் பெங்களூரில் பயிற்சி ஆட்டம்
ADDED : ஜூலை 17, 2025 11:06 PM

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக, பெங்களூரில் நடக்கும் இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடுகிறது.
இது தொடர்பாக, ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை:
மகளிர் அணி உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர், அக்டோபரில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக பெங்களூரில் பயிற்சி ஆட்டம் நடக்கிறது. செப்டம்பர் 25ம் தேதி, பெங்களூரில் உள்ள பி.சி.சி.ஐ., யின் சென்டர் ஆப் எக்சலன்ஸ் விளையாட்டு அரங்கில், இங்கிலாந்துடனும்; செப்டம்பர் 27ம் தேதியன்று, பெங்களூரு சின்னசாமி விளையாட்டு அரங்கில் நியூசிலாந்துடனும் இந்திய மகளிர் அணி விளையாடும்.
செப்டம்பர் 30ம் தேதியன்று, இதே விளையாட்டு அரங்கில், உலகக்கோப்பை விளையாட்டு துவக்க போட்டி நடக்கிறது.
போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. 12 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை நடக்கிறது. அதற்கு முன்னதாக, செப்டம்பர் 25 முதல் 28ம் தேதி வரை, ஒன்பது பயிற்சி ஆட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- நமது நிருபர் -.