ADDED : மார் 01, 2025 05:37 AM

நம் வீட்டில் என்னதான் பார்த்து பார்த்து கரெக்டான அளவில் சாதம் வைத்தாலும், யாராவது சரியாக சாப்பிடாவிட்டால் சாதம் மிச்சம் ஏற்படுவது வழக்கம்.
பழைய சாதத்தை வைத்து பிரைடு ரைஸ், முட்டை சாதம், தாளித்த சாதம் என்று ஏதாவது ஒன்று செய்து சாப்பிடவும். ஆனால் மிச்சம் அடைந்த சாதத்தை வைத்து இடியாப்பம் கூட செய்யலாம். என்ன சாதத்தில் இடியாப்பமா என்று நமக்கு கேள்வி எழும். ஆமாம் சாதத்தில் 'பீட்ரூட் இடியாப்பம்' செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் மீதமுள்ள சாதம்
ஒரு பீட்ரூட்
அரை கப் மாவு
உப்பு, நெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் மீதம் ஆன சாதத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின், பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு, நெய் சேர்த்து பீட்ரூட் சாறு கலந்து கொள்ளவும்.
பிறகு இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லி தட்டில் இடியாப்பம் பிழிந்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் இடியாப்பம் தயார்.
இந்த இடியாப்பம் சாப்பிடுவதற்கு மெதுவாக இருக்கும். குழந்தைகள் சாப்பிட்டால் அவர்களுக்கு பீட்ரூட் சத்துக்கள் கிடைக்கும். மீதம் ஆன சாதத்தை வேஸ்ட் ஆக கொட்டாமல் இடியாப்பம் செய்து சாப்பிட்ட திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும்.
தேங்காய் சட்னி, முட்டை குருமா, சிக்கன் குருமா, உருளைக்கிழங்கு குருமா என சைடிஸ் வைத்து சாப்பிடலாம். நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.
--- நமது நிருபர் -