sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ பாம்பே உருளைக்கிழங்கு மசாலா

பாம்பே உருளைக்கிழங்கு மசாலா

பாம்பே உருளைக்கிழங்கு மசாலா


ADDED : மார் 01, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2025 05:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உருளைக்கிழங்கு பயன்படுத்தி சிப்ஸ், வறுவல், ஹல்வா, போண்டா என, பல விதமான தின்பண்டங்கள் செய்கின்றனர். உருளைக்கிழங்கு பாம்பே மசாலா செய்யலாம். மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்


 உருளைக்கிழங்கு - அரை கிலோ

 கறிவேப்பிலை - ஒரு கொத்து

 மிளகாய் துாள் - ஒரு ஸ்பூன்

 மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்

 கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

 சீரகம் - ஒரு ஸ்பூன்  கடுகு - ஒரு ஸ்பூன்

 இஞ்சி - சிறிய துண்டு  பச்சை மிளகாய் - 1

 உப்பு - தேவையான அளவு  நெய் - ஒரு ஸ்பூன்

 எண்ணெய் - ஒரு ஸ்பூன்  தனியா துாள் - ஒரு ஸ்பூன்

செய்முறை


முதலில் உருளைக்கிழங்கை கழுவி, வட்ட, வட்டமாக நறுக்கவும். குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். அதன்பின் அடுப்பை பற்ற வைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் கறிவேப்பிலை, கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகத்தை போட்டு நறுமணம் வரும் வரை வதக்கவும்.

அதன்பின் இந்த கலவையில், தனியா துாள், மிளகாய் துாள், மஞ்சள் துாள் போடுங்கள். இந்த மசாலா கலவையில் உருளைக்கிழங்கை போட்டு, உடைந்து விடாமல் லேசாக கிளறவும். இறுதியில் தேவையான உப்பு போட்டு, கொத்துமல்லி தழையை துாவினால், பாம்பே மசாலா உருளைக்கிழங்கு தயார்.

தயிர் சாதம், ரசம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் என, அனைத்து சாதங்களுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us