ADDED : மார் 01, 2025 05:39 AM

மாலை நேரத்தில், சுவையான, ஆரோக்கியமான ஸ்னேக்ஸ் சாப்பிட விரும்புவோருக்கு, ஓட்ஸ் கட்லெட் பெஸ்ட் சாய்ஸ். 'ஞாயிறு மாலை' டிபனுக்கு ஏற்றது.
செய்முறை
ஓட்சை நீரில் கழுவி, ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள், மிளகாய் துாள், கரம் மசாலா, அமெச்சூர் துாள், சாட் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, மிளகு துாளை போட்டு, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசையவும்.
சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். வேறு ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதாமாவு, மிளகாய் துாள், உப்பு, நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். இந்த கலவையில், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள ஓட்ஸ் மாவை சிறு, சிறு வடை போன்று செய்து போடவும்.
இதை எடுத்து பிரட் துாளில் பிரட்டவும். அதன்பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொறித்தால், ஓட்ஸ் கட்லெட் ரெடியாகும்.வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர்
- நமது நிருபர் -.