தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ அதிக சுவை உடைய வெஜ் ஆம்லெட்

 அதிக சுவை உடைய வெஜ் ஆம்லெட்

 அதிக சுவை உடைய வெஜ் ஆம்லெட்


ADDED : மார் 21, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பொதுவாக ஆம்லெட் என்றால், முட்டை பயன்படுத்தி செய்யும் சிற்றுண்டி என, கருதப்படும். ஆனால், முட்டை இல்லாமலும், ஆம்லெட் செய்யலாம். அதை எப்படி செய்வது என, தெரிந்து கொள்ளலாமா.

தேவையான பொருட்கள்

l கடலை மாவு - ஒன்றரை கப்

l அரிசி மாவு - அரை கப்

l சாட் மசாலா - அரை ஸ்பூன்

l மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்

l பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்

l உப்பு - தேவையான அளவு

l பிரட் - 5 ஸ்லைஸ்கள்

l நெய் அல்லது எண்ணெய் - 2 ஸ்பூன்

தேவையான அளவு

முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்துமல்லியை நன்றாக கழுவி, துண்டு, துண்டாக நறுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவை போடுங்கள். இதில், சாட் மசாலா, மஞ்சள் துாள், பேக்கிங் பவுடர், உப்பு சேர்க்கவும். இதில், ஒன்றரை கப் தண்ணீரை சிறிது,சிறிதாக ஊற்றி, கட்டிகள் இல்லாமல் கலக்கவும். அத்துடன் பொடிதாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மீண்டும் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும். சூடானதும் பிரட் ஸ்லைஸ்களை போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்படி வறுத்து, தட்டில் வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து, சிறிது வெண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். சூடானதும் கடலை மாவு கலவையை கரண்டியால் ஓரளவு தடிமனாக ஊற்றவும். இதில், சுற்றிலும் நெய் ஊற்றவும். ஓரளவு வெந்ததும் நடுவில் பிரட் ஸ்லைஸ்களை வைக்கவும். இதை நான்கு பக்கமும் மூடி, அதன் மீது வெண்ணெய் தடவி, சில நிமிடங்கள் வேக வைத்தால் வெஜ் ஆம்லெட் தயார்

இதனை சூடாக சாப்பிட்டால், அதிக சுவையுடன் இருக்கும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும். பள்ளி விட்டு வரும் குட்டீஸ்களுக்கு செய்து தரலாம்; விரும்பி சாப்பிடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us