தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆந்திரா ஸ்பெஷல் வெண்டைக்காய் காரம் 

 ஆந்திரா ஸ்பெஷல் வெண்டைக்காய் காரம் 

 ஆந்திரா ஸ்பெஷல் வெண்டைக்காய் காரம் 


ADDED : மார் 21, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 05:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-- நமது நிருபர் --

பச்சை காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காயில், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் உள்ளது. குழந்தைகள் நிறைய வெண்டைக்காய் சாப்பிட்டால் புத்தி கூர்மை நன்றாக இருக்கும் என்று சொல்வர்.

வெண்டைக்காயில் காரக்குழம்பு, பொரியல், வத்தல் உள்ளிட்ட ரெசிபிகளை செய்யலாம். ஆந்திரா ஸ்பெஷல் வெண்டைக்காய் காரம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

l கால் கிலோ வெண்டைக்காய்

l 100 கிராம் வேர்க்கடலை

l ஒரு டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் பவுடர்

l ஒரு டீஸ்பூன் சீரகம்

l ஐந்து பல் பூண்டு

l உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடிசாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து, நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின், வேர்க்கடலையை சேர்த்து பொரித்து எடுக்கவும். பூண்டை இடித்து வைத்து கொள்ளவும். மிக்சி ஜாரில் சீரகம், காஷ்மீர் மிளகாய் பவுடர், உப்பு சேர்த்து அரைத்து பூண்டுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின், பொரித்து வைத்துள்ள வெண்டைக்காய், வேர்க்கடலை சேர்த்து, நன்றாக கிளறினால் காரமான, சுவையான வெண்டைக்காய் காரம் தயார். ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், லெமன் சாதம் அனைத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us